Sunday 25 February 2018

சத்குரு மகா சந்நிதானம் நிரங்காரி அன்னை 

தமிழர் பண்பாட்டில் தைப் பொங்கல்

1. அக்டோபர் புரட்சி  

     ரஷ்ய புரட்சியை அக்டோபர் புரட்சி என்கிறோம், கொண்டாடுவது நவம்பர் 7இல். ஏன் தெரியுமா? ரஷ்ய நாட்காட்டியின்படி 1917 அக்டோபர் 25-ம் நாள் இந்தப் புரட்சி நடைபெற்றது. அந்தக் காலத்தில் ரஷ்யா பின்பற்றிவந்தது பழைய ஜூலியன் நாட்காட்டி. இப்போது நாம் பின்பற்றுவது நவீன கிரிகோரிய நாட்காட்டி. புதிய நாட்காட்டியின்படி புரட்சி நடைபெற்ற நாள் நவம்பர் 7.  அயன சக்கிர சலனத்தால் ஐரோப்பிய நாள்காட்டியும் பிழை கண்டது. ஈஸ்ட்டர் திருநாள் ஞாயிற்றுக்கிழமை தான் ஏற்படவேண்டும். புனித வெள்ளி வெள்ளிகிழமை தான் ஏற்படவேண்டும். இவை நிலை தவறியது. எனவே தான் கிரோகோரி எனும் போப் ஐரோப்பிய நாள்காட்டியை சீர் செய்தார். அதன் தொடர்ச்சியாக சுமார் பதினோரு நாட்கள் விடுபட செய்து நாள்காட்டி செய்யப்பட்டது. புரட்சிக்கு முன்பு ரஷ்யாவில், ஐரோப்பாவில் பயன்படுத்திய துவங்கி இருந்ததும், பத்தாம்பசலி பிற்போக்கு ஜார் அரசு சீர்திருத்த நாட்காட்டியை பயன்படுத்தவில்லை. புரட்சி நடந்தபோது இருந்த நாள்காட்டியில் அக்டோபர் 26, ஆனால் புரட்சிக்கு பிறகு அறிவியல் பூர்வ நாள்காட்டி வந்த பின் நவம்பர் 7. அதனால் தான் அக்டோபர் புரட்சியை நவம்பர் மாதத்தில் கொண்டாடுகிறோம்.

           ரஷ்யா புரட்சி போல, இந்திய விடுதலைக்கு பிறகு நமது நாள்காட்டிகளும் அறிவியல் பூர்வமாக இருக்க வேண்டும் என்ற அவாவில் திருக்கணித பஞ்சாங்கம் எனும் நாள் காட்டிகள் ஏற்படுத்த பட்டன. ஆயின் பழம் பஞ்சாங்கங்கள் கடவுள் கொடுத்த வாக்கியம் பாரம்பரியம் எதுவம் மாற கூடாது என கூறி சீர்திருத்தங்களை தடுத்து வருகின்றனர். கேரளாவில் சுமார் ஐநூறு ஆண்டுகள் முன்பே சீர்திருத்தம் வேண்டும் என வானவிலயளர்கள் கூறி யுள்ளனர். சமீபத்தில் மேகநாத் சாஹா எனும் உலக புகழ் பெற்ற விஞ்ஞானி (இடது சாரி வேட்பாளராக போட்டியிட்டு வென்று பாராளுமன்ற உறுப்பினராக இருந்தவர்) இந்திய நாள்காட்டியை சீர்திருத்தம் செய்ய வேண்டும் என முயற்சி செய்தார். இந்தியாவில் உள்ள பல்வேறு நாள்காட்டிகளை ஒருங்கிணைத்து சட்டப்படியான, அலுவல் சார்ந்த இந்திய தேசிய நாட்காட்டி தயாரித்தார்.   இது நடப்பில் உள்ள வானியல் நிலைக்கு ஏற்ப மார்ச் 21 அன்று துவங்கும். சக ஆண்டு நாட்காட்டியை தேசிய நாட்காட்டியாக 1957 ஆம் ஆண்டு மார்ச் 22இல் ஏற்றுக்கொள்ளப்பட்டது.

2. ijg; nghq;fy;   ij ePuhly;
     தொன்மை திருவிழாக்களின் எச்சமாக நிற்கும் ஒரு சில பண்டிகைகளில் பொங்கல் திருவிழாவும் ஒன்றாகும். குறிப்பாகப் பொங்கல் திருவிழா என்பது சுறவத் திங்கள்  my;yJ kfu khjk;  ( தை மாதம் ) முதல் நாள் கொண்டாடப் படுகின்றது. ஏனைய தமிழர் விழாக்கள் மதம் சார்ந்து இருந்தன, பொங்கல் திருவிழா மட்டுமே இயற்கை சார்ந்து இருந்தது. பொங்கல் திருநாள் தமிழ்நாட்டில் மட்டும் கொண்டாடப்பட வில்லை என்பது அவற்றில் மிக முக்கியமான ஒன்றாகும். அனைவரும் வேளாண் விளைச்சல் களைத் தருவித்த வானம், கதிரவன் மற்றும் இயற்கைக்கு நன்றி சொல்லும் நன்னாளாகவே அறியப்படுகின்றது பொங்கல் திருநாள் தமிழர்களின் திருநாளhf மட்டுமில்லாமல் இந்தியாவின் பிற பாகங்களிலும், பெரும் பாலான தென் கிழக்கு ஆசிய சமூகங்களிலும் மகரச் சங்கராந்தி என்ற பெயரில் திருவிழாவாகக் கொண்டாடப்படுகின்றது.  மகரச் சங்கராந்தியின் மற்றுமொரு ஒற்றுமையை நோக்கினால் மேற்கூறிய அனைத்துப் பகுதிகளில் வாழும் வேளாண் சமூகத்தவரே இந்த விழாவை முதன்மையாகக் கொண்டாடுகின்றனர். பொங்கல் என்பது தென்னிந்திய மக்களின் பழமை வாய்ந்த பண்டிகையாகும்; குறிப்பாக தமிழர்களின் பண்டிகையாகும். இந்த பண்டிகையின் வரலாற்றைப் பார்க்க வேண்டுமானால் நாம் சங்க காலமான கி.மு. 200 - கி.மு. 300 நோக்கி செல்ல வேண்டும். பொங்கல் என்பது சமஸ்கிருத புராணங்களில் குறிப்பிடப்பட்டுள்ளதை போல் திராவிட அறுவடை பண்டிகையாக அறியப்பட்டாலும் கூட, வரலாற்று அறிஞர்கள் இந்த பண்டிகையை சங்க காலத்தின் போது கொண்டாடப்பட்ட தைநீராடல் என நம்புகின்றனர்.
“தைஇத் திங்கள் தண்கயம் படியும்” என்று நற்றிணை
“தைஇத் திங்கள் தண்ணிய தரினும்” என்று குறுந்தொகை
“”தைஇத் திங்கள் தண்கயம் போல்” என்று புறநானூறு
“தைஇத் திங்கள் தண்கயம் போல” என்று ஐங்குறுநூறு
“தையில் நீராடி தவம் தலைப்படுவாயோ” என்று கலித்தொகை

       சங்க கால இலக்கியத்தில் காணப்படும் இந்திர விழா என்பதையும் பொங்கல் திருவிழா என்பதையும் ஒன்றாகக் கருதுபவர்களும் உள்ளார்கள். ஆனால் அது தான் பொங்கல் திருவிழாவா என்பதற்கு எந்தவொரு சான்றும் இல்லை. தூங்கெயிலெறிந்த தொடித்தோள் செம்பியன் என்ற சோழ மன்னன் இந்திர விழாவை புகார் நகரில் தொடங்கி வைத்துள்ளான் என்ற குறிப்புக்கள் கிடைக்கின்றன.
அதே போலச் சங்கக் காலத்தில் உழவர் திருநாள் கொண்டாடப்பட்டதாகக் குறிப்புக்கள் காணப்படுகின்றன.
“செதுமொழி சீத்த செவி செறுவாக முதுமொழி நீராப் புலனாவுழவா
புதுமொழி கூட்டுண்ணும் புரசைசூழ் நல்லுர்'' (கலித். 68)     என்ற பாடலில் புலவர்கள் ஒன்று கூடி கவி பாடும் திருவிழாவை உழவர்கள் கொண்டாடும் புதியவை உண்ணும் திருவிழாவோடு உவமை படுத்துக்கின்றார்.
அதே போலச் சமணத் துறவியான இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் வரும் இந்திர விழாவின் துவக்கத்தில், காவல்பூதத்திற்கு, புழுக்கலும், நோடையும், விழுக்குடை மடையும், பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து வழிபட்டதாக, கூறுகின்றார்.
“புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும்
பூவும் புகையும் பொங்கலும் சொரிந்து''
(சிலப். 5:68-69) .
           இதில் புழுக்கல் என்பதுதான் பொங்கல். மேலும், சிலப்பதிகாரத்திற்கு, உரை எழுதிய அடியார் நல்லாரும், அரும்பத உரைகாரரும், பொங்கல் என்ற சொல்லுக்கு கள் என, எழுதியுள்ளனர். இன்றும், அம்மன் கோவில்களில், மதுப்பொங்கல் பொங்கும் வழிபாடு உள்ளதை இதனுடன் இணைத்துக் காணலாம். சம்பந்தர், தன் மயிலாப்பூர் பதிகத்தில், 'நெய்பூசும் ஒண்புழுக்கல் நேரிழையார் கொண்டாடும் தைப்பூசம்' என, சுட்டுகிறார். திருப்பாவை, அதை சற்றே வேறுபடுத்தி, 'பாற்சோறு மூட நெய்பெய்து முழங்கை வழிவார' என்கிறது. ஆக, சங்ககாலத்திலும், பக்தி இயக்க காலத்திலும், புழுக்கல் என்பது தான், பொங்கலாக கருதப்பட்டு வந்திருக்கிறது
       இடைக்காலச் சமணப் புலவர் திருத்தக்க தேவர் ( 9ம் நூற்றாண்டு ) தமது படைப்பான சீவக சிந்தாமணியில் பாலோடு இனிப்பையும், அரிசியையும் சமைத்து பொங்கல் சோறாக்கும் முறையைக் கூறுகின்றார்.

“மதுக்குலாம் அலங்கல் மாலை
மங்கையர் வளர்த்த செந்தீப்
புதுக்கலத்து எழுந்த தீம்பால் பொங்கல்''
(சீவக. சிந். 1821)

       பொங்கல் பற்றிய முதற் குறிப்புக்கள் இடைக்காலச் சோழர்களின் ( 11-ம் நூற்றாண்டு ) கல்வெட்டில் காணப்படுகின்றன எனவும். அவற்றை அக்காலத்தில் புதியீடு என்றழைக்கின்றனர் எனவும் அறியப்படுகின்றது.  அதாவது, ஆண்டின் முதல் அறுவடை என்று அதற்குப் பொருள். உழவர்கள் தை மாதத்தின் முதல் நாளில், அந்த ஆண்டின் முதல் அறுவடையை மேற்கொள்வது வழக்கமாக இருந்தது. இதுதான் பின்னர் பொங்கல் பண்டிகையாக மாறியது என்கிறார்கள்.

3.kfur; rq;fuhe;jp
      மகரச் சங்கராந்தி என்பது இந்து நாட்காட்டியின் சூரியன் தனுர் ராசியில் இருந்து மகர ராசிக்கு இடம் பெயர்வது ஆகும் இந்த மகரச் சங்கராந்தி உத்தராயணம் என்றும் அழைக்கப்படுகின்றது. அதாவது சூரிய ஒளி அட்ச ரேகையில் இருந்து கடக ரேகைக்கு நகரும் காலப் பகுதியாகும். பகல் வேளை குறுகி இரவு வேளை மிகும் காலப் பகுதியாகும். இதனை ஆங்கிலத்தில் Winter Solstice என்பார்கள். ஆனால் அறிவியலின் படி இந்த உத்தராயணம் என்பது திசம்பர் 21-ம் நாளே நிகழ்ந்து விடுகின்றது. இந்திய பஞ்சாங்கg;gb மகரச் சங்கராந்தி தினம் ஜனவரி 14-ல் கொண்டாடப்படுகின்றது. தை திங்கள் உத்தராயணம் டிசம்பர் 21 அன்று ஏற்படுகிறது என்றால் நாம் மட்டும் தை திங்களை ஜனவரி 14 அன்று கொண்டாடுவது ஏன்? உள்ள படியே இது ஜோதிடர்கள் மற்றும் …………………. ஏற்படுத்திய நடைமுறை. நாள் காட்டிகள் செழுமை படுத்த பட்ட காலத்தில், சுமார் இரண்டாயிரம் ஆண்டுகள் முன்பு உத்தராயணம் ஜனவரி 14 (தை முதல் நாள்) இருந்தது. அனால் இன்று இந்த வடஓட்டம் டிசம்பர் 21/22 அன்று நடைபெறுகிறது.
      முதல் ராஜேந்திரனின், காளஹஸ்தி கல்வெட்டில், மகர சங்கராந்தி அன்றுபெரும் திருவமுது படைக்கப்பட்ட தகவலை, தொல்லியல் அறிஞர் கிருஷ்ணமூர்த்தி, வெளியிட்டுள்ளார். தஞ்சை மராட்டியர் காலத்தில், மகர சங்கராந்தி அன்று, வாழை கட்டி, பொங்கல் விட்டு கொண்டாடியதாக, ஆவணங்கள் குறிப்பிடுகின்றன. அதேபோல், 17ம் நூற்றாண்டைச் சேர்ந்த வலங்கை இடங்கை வரலாறு என்ற நூலில், மகர சங்கராந்தி அன்று, சுவாமி புறப்பாடும், தேவதாசியர் நடனமும் நடந்ததாக குறிப்பு உள்ளது.
4.ijg;G+rk;
     சந்திரனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சந்திரமானம் என்றும், சூரியனை அடிப்படையாகக் கொண்ட கணக்கீட்டிற்கு, சவுரமானம் என்றும் பெயர். தை என்ற சொல், திஷ்யம் என்ற சொல்லில் இருந்து வந்தது. திஷ்யம் என்றால் பூச நட்சத்திரம். திஷ்யம்-தைஷ்யம்- தைசம்- தை என, மாற்றம் கொண்டது. தைசம் என்றால் பூச நட்சத்திரம் என, கதிரைவேற்பிள்ளையின் சங்கத்து அகராதி கூறுகிறது. பூச நட்சத்திரத்தில், முழு நிலா வரும் நாள் தான், தைப் பூசம். அந்த நட்சத்திரத்தின் அடிப்படையில் தான், தை மாதத்திற்கு அந்தப் பெயர் வந்தது.
     தைசப்பூசத்தன்று, முழுநிலா நாளில், நிலத்தில் நீர் ஊறும் என்பது சங்க கால மக்கள் நம்பிக்கை. புஷ்யம் என்ற சொல்லுக்கு புஷ்டி என்று அர்த்தம். அந்த அடிப்படையில், தையில் நீர் வளம் பெருகி, உணவு உற்பத்தி அதிகரித்து நாடு நலமாக இருக்க வேண்டும் என, நோற்பது தான் தைந்நீராடல். பூர்ணிமாந்த கணக்கின்படி, மார்கழிப் பவுர்ணமியில் விரதத்தை துவக்கி, தை பவுர்ணமியில் அதாவது தைசப் பூசத்தன்று முடிப்பது தைந்நீராடல். சங்க இலக்கியம் இதனை 'தவத் தைந்நீராடல்' என, குறிப்பிடுகிறது. இந்த விரதத்தை பெண்கள் தான் இருப்பர். பக்தி இயக்க காலகட்டத்தில், சைவமும், வைணவமும் இதை தத்தமக்கு ஏற்ப மாற்றிக் கொண்டன.

     தைப்பூசம் பற்றிய குறிப்பு, மகாவம்சம் என்ற இலங்கை வரலாறு பற்றிய நூலில் முதன்மையாக காணப்படுகிறது. புத்தர் வான்வழியாக இலங்கை சென்ற போது, இலங்கையின் பூர்வ குடிகளான யட்சர்கள், மாவலி கங்கையாற்றின் கரையில், தைப்பூச விழாவைக் கொண்டாடிக் கொண்டிருந்தனர் என, மகாவம்சம் குறிப்பிடுகிறது.
    யட்சர்கள், மங்கோலிய இனத்தவர்கள். அவர்களின் தலைவன் குபேரன். மிகப் பழமையான, தர்ம சூத்திர நூலான ஆபஸ்தம்ப சூத்திரத்தில், தைப்பூசத்தன்று, குபேரனுக்கு பால் பொங்கல் படைத்து வழிபடுவது பற்றிய குறிப்பு உள்ளது.

4. gz;ghL
      பண்பாடு என்பது பரந்த பொருளுடன் பயன்படுத்தப்படும் ஒரு சொல். ஆங்கிலத்தில் culture (கல்ச்சர்) என்னும் சொல்லுக்கு இணையான பொருளில் இச்சொல் தமிழில் பயன்படுத்தப்படுகிறது. கல்ச்சர்  (‘culture’) என்னும் ஆங்கிலச்சொல்லுக்குப் பண்பாடு என்றுதான் பொருள். (அறிவியலில் கல்ச்சர் என்பது வளர்நிலையை – வளர்மத்தைக் குறிக்கிறது.)
    பண்பாடு ஒரு பலக்கிய கருப்பொருள். அதற்குப் பல நிலைகளில் வரையறை உண்டு. ஒரு நிலையில் பண்பாடு என்பது ஒரு குழுவின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது. மொழி, உணவு, இசை, சமய நம்பிக்கைகள், தொழில் சார் தெரிவுகள், கருவிகள் போன்றவையும் பண்பாட்டுக்குள் அடங்கும்.
    பொதுவாக இது மனிதரின் நடவடிக்கைகளைக் குறிக்கிறது எனலாம். பண்பாட்டின் வெவ்வேறு வரைவிலக்கணங்கள், மனிதச் செயல்பாடுகளை விளங்கிக்கொள்வதற்கான அல்லது அவற்றை மதிப்பிடுவதற்குரிய அளபுருக்களுக்கான வெவ்வேறு கோட்பாடுகளைப் பிரதிபலிக்கின்றன எனலாம். 1952ல் அல்பிரட் எல். குறோபெர் என்பாரும் கிளைட் குளுக்ஹோனும் பண்பாடு என்பதற்குக் கூறப்படும் 200க்கு மேற்பட்ட வரைவிலக்கணங்களைத் தாங்கள் எழுதிய பண்பாடு: எண்ணக்கருக்களும் வரைவிலக்கணங்களும், ஒரு விமர்சன மீள்பார்வை (Culture: A Critical Review of Concepts and Definitions) என்னும் நூலில் பட்டியலிட்டுள்ளார்கள்.

4. nghq;fy; tpoh
   பொங்கல் விழா நான்கு நாள் திருவிழா கொண்டாட்டம் ஆகும் 1.Nghfp> 2.nghq;fy;> 3.khl;Lg; nghq;fy;> fZg;gz;bif 4.fhZk; nghq;fy;.

5. Nghfp
     போகி பண்டிகை என்பது பழையன கழித்தல் என்பதாக அடையளம் கொண்டு வேளாண்மையை மேற் கொண்டவர்களால் கொண்டாடப்படும் விழாவாகும். மார்கழி மாதத்தின் கடைசி நாளன்று (பொங்கல் திருநாளின் முதல் நாள்) கொண்டாடப்படுகிறது. இந்த நாள்”பழையன கழித்து, புதியன புகவிடும்” நாளாகக் கருதப்படுகிறது. பழையவற்றையும், உபயோகமற்றவையையும் விட்டெறியும் நாளாகக் கருதப்படுகிறது. வீட்டில் தேங்கிப் போயிருக்கும் குப்பைகள் தேவையற்ற பொருட்கள் அப்புறப்படுத்தப்பட்டு வீடு சுத்தமாக்கப்படும். வீடு மட்டுமல்ல மனதில் இருக்கும் தீய எண்ணங்களும் தவறான எண்ணங்களும் நீக்கப்பட வேண்டும் என்பது இதில் உள்ள தத்துவமாகும். இதையொட்டியே பொங்கலுக்கு முன் வீட்டிற்கு புது வர்ணம் பூசி வீட்டை அழகு படுத்துகிறார்கள். பொங்கல் சமயத்தில் வீடு புதுப் பொலிவுடன் காணப்படும். இது கிராமங்களில் பொங்கல் சமயத்தில் காணக் கிடைக்கும் இனிய காட்சியாகும்.
போகியன்று, வீட்டின் கூரையில் செருகப்படும் காப்புக்கட்டு. பொங்கல் காப்பு கட்டில் பயன்படுத்தப்படும் சிறுபீளை, ஆவாரம்பூ, பிரண்டை, வேப்பிலை, மஞ்சள் கொத்து இவற்றைத்தான் பஞ்ச மூலிகைகள் என்கிறோம்.

தமிழகப் பழங்குடிகளில் ஒருவரான இருளர், சிறுபீளை பூtpid ‘பொங்கல் பூ’ கூரைப்பூ என்றழைக்கின்றனர். பொங்கல் பண்டிகையின்போது பூக்களுடன் கூடிய பூளைச் செடி வீடுகளின் முகப்புகளில் செருகப்படுகிறது மற்றும் களத்து மேட்டில் நெற்குவியல்களைச் சுற்றித் தோரணமாகக் கட்டப்படுகிறது.
சிலர் பூளைப்பூ வேளாண் மக்களுக்கு வளத்தைக் கொண்டுவரும் என்று கூறுகின்றனர். இதன் காரணமாகவே நிகண்டு ‘பூளை வெற்றிப் பூவாகும்மே’ என்று குறிப்பிடுகிறது.
பூளை சிறுதெய்வ வழிபாட்டில் மட்டுமின்றி பெருந்தெய்வ வழிபாட்டிலும் முக்கியத்துவம் பெற்றதாகும். ‘ஏரார் இரும்பூளை இடங்கொண்ட ஈசனே’ என்று ஞானசம்பந்தர் தேவாரம் குறிப்பிடுவதை நோக்க வேண்டும்!
சிலப்பதிகாரத்தில் கண்ணகியின் குறை தீர அவளுடைய தோழி தேவந்தி, பாசண்டர் சாத்தான் எனும் சிறு தெய்வத்தை வேண்டித் தொழுதபோது,
‘அறுகு சிறுபூளை நெல்லொரு தூய் உச்சென்று
பெறுக கணவனோடு என்றாள்’ (சிலப்பதிகாரம்: 9:43-44)
இப்பூவை தேவந்தி ஒரு பலிப்பூவாகக் கருதியுள்ளார். எனவே, பொங்கல் விழாவின்போது அறுவடைப் பயிரான நெல்லின் ‘ஆவிக்கு’ படைக்கப்படும் ஒரு ‘பலித் தாவரமாக’ பூளையைப் பண்டைய தமிழர் பயன்படுத்தியிருக்கக்கூடும்.

          பழந்துயரங்களை அழிப்பதான இப்பண்டிகையைப் “போக்கி” என்றனர்.  அந்த “போக்கி” என்ற சொல் நாளடைவில் மருவி “போகி” என்றாகிவிட்டது. அக்கால வழக்கப்படி வருடத்தின் கடைசி நாள் என்பதால் நடந்து முடிந்த நல் நிகழ்வுகளுக்கு நன்றி கூறும் நாள் போகி என்போரும் உண்டு. போகி உண்மையில் பலராமனுக்கு உரிய திருவிழா vd;Wk;; அவனை போகி என்ற பெயரால், பாண்டியர் செப்புப்பட்டயம் குறிப்பிடுகிறது vd;Wk; xU nra;jp cz;L.  அவனது ஆயுதம் கலப்பை. அவன் ஒரு விவசாய தெய்வம். மதுபானப் பிரியன். அவனுக்கு மதுப் பொங்கல் படைத்திருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.போகிப் பண்டிகையின் போது போளி, வடை, பாயசம் போன்றவை இறைவனுக்கு நிவேதனம் செய்யப்படும்.
        NkYk; அக்காலத்தில் போகியன்று சில கிராமங்களில் ஒப்பாரி வைக்கும் பழக்கம் இருந்தது. அப்போது அழுவது எதனால், என்பதனை ஆராய்ந்த வரலாற்று அறிஞர்கள், அந்நாளைப் புத்தர் இறந்த தினமென்று கண்டறிந்துள்ளனர்


6. nghq;fy;
     இந்தப் பண்டிகை சூரிய பகவானுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கொண்டாடப்படும் பண்டிகையாகும். பொங்கும் மங்கலம் எங்கும் தங்கிட தமிழகத்தில் அனைவரும் கொண்டாடும் பண்டிகை பொங்கல். பொங்கல் தை மாதம் 1-ம் தேதி, (ஜனவரி மாதம் 14-ம் தேதி) கொண்டாடப்படும். அறுவடை முடிந்து பெற்ற புத்தரிசி, கரும்பு, மஞ்சள், பனங்கிழங்கு, நம்முடைய கொடிவழிக் காய்கறிகள் (குறிப்பாக அவரை, புடலை, கத்திரி, வாழை, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, கருணைக் கிழங்கு போன்றவையே படையலாக வைக்கப்படும். செந்நெற் பச்சரிசியைப் பெரும்பாலும் தவிடு போக்காமல் நீர் சேர்த்துச் சமைத்து பருப்புக் குழம்புடன் உண்பதும் மரபு. பொங்கு என்ற சொல் கொதித்தல், மிகுதல், சமைத்தல், செழித்தல் எனப் பொருள்படும். பொங்குவதால் பொங்கல். பொங்கல் விழாவை தமிழர் என்னும் இனக்குழு தொடர்பான விழா என்று தெளிவாக உணரமுடியும். இந்த விழாவின் நடைமுறையைப் பார்த்தால், மெய்யியற் சமயங்கள் தமிழகத்தில் நிலைகொள்ளுவதற்கு முன்னாலிருந்தே, இனக்குழு வழிபாடுகள் நிலவிய போதே, இந்த விழாக் கொண்டாடுவது தொடங்கியிருக்க முடியும் என்பதையும் புரிந்துக் கொள்ள இயலும். jw;fhyj;jpy; efh;g;Gwq;fspy; $l புதுப்பானை, புதுஅரிசி, சர்க்கரை, பயறு, தேங்காய், வாழைப்பழம், வெற்றிலை, பாக்கு, சாம்பிராணி, கற்பூரம், கரும்பு, இஞ்சி கொத்து, மஞ்சள் கொத்து போன்ற பொருட்கள் பொங்கலில் முக்கிய இடத்தைப் பிடிக்கிறன. பொங்கலோடு படைக்கப்படும் இதர பொருட்களில் ஐந்து வகைக் கிழங்குகளும், ஐந்து வகைக் காய்கறிகளும் அடங்கும். இந்த ஐந்து வகைக் கிழங்குகளில் பொதுவாக வள்ளிக் கிழங்கு, சேனை அல்லது கருணைக் கிழங்கு, சேப்பங்கிழங்கு, சிறு கிழங்கு, பனங்கிழங்கு ஆகியனவும், ஐந்து வகைக் காய்கறிகளில் பொதுவாகப் பூசணி, மொச்சை, புடலை, சுரைக்காய், வழுதுணங்காய் (கத்தரி) ஆகியனவும் அடங்கும்
தைப்பொங்கல் தினத்தன்று  சூரியன் உதிக்கும் அதிகாலையே விழித்தெழுந்து பொங்கலுக்கான ஆயத்தங்களைச் செய்வார்கள்.  வீட்டு வாசலில் (கதவு நிலையில்) மாவிலை தோரணம் கட்டி நாற்புறமும் வாசல் வைத்து கோலமிட்டு புனிதமாக்கிய இடத்தின் நடுவில் புதிதாக மண்ணினால் பிடித்து வைத்த மூன்று அடுப்பு கட்டிகளையும் வைத்து பொங்கல் பானை வைப்பதற்கு அடுப்பை தயார்படுத்துவார்கள். குடும்ப அங்கத்தவர்கள் அனைவரும் ஒன்றுகூடி நிறைகுடம் வைத்து, குத்துவிளக்கு ஏற்றி, தேங்காய் உடைத்து வைத்து, தூபம், தீபம் காட்டி  அடுப்பில் நெருப்பு மூட்டி, புதுப்பானையின் கழுத்தில்  இஞ்சி இலை, மஞ்சள் இலைகளைக் கட்டி(காப்புக் கட்டி), அதனுள் நீரும் பசுப்பாலும் விட்டு இரு கைகளினாலும் அரிசியை பானையில் இட்டு மகிழ்ச்சியுடன் சூரிய பொங்கலை பொங்க வைப்பார்கள். பால் பொங்கி எழுந்து வழியும் வரை நெருப்பை கூட எரிய விடுவார்கள். பொங்கல் பொங்கி வழியும்போது ”பொங்கலோ பொங்கல்” என ஆரவாரித்து,சக்கரை, ஏலக்காய் முதலியவற்றை போட்டு பொங்கல் செய்வார்கள். அரிசி போட்டபின் பானையில் இருக்கும் மிதமிஞ்சிய நீரை ஒரு சுத்தமான பாத்திரத்தில் எடுத்து அதனை பூஜைகள் முடியும் வரை வைத்திருந்து அதனை மாவிலை கொண்டு வீட்டின் எல்லாப் பகுதிகளுக்கும் தெளிப்பார்கள். அந் நீரில் சூரியனின் சக்தி இருப்பதால் சூரிய பகவானின் சக்தி எல்லா இடங்களிலும் பட்டு பிரகாசிக்கும் (தோஷங்கள் நீங்கும்) என்பது அவர்களின் நம்பிக்கை. புதுமனை, புதுமணமக்கள் இருப்பவர்கள் பொங்கல் விழாவை ”தலைப் பொங்கல்” என வெகு சிறப்பாக கொண்டாடுவார்கள்.
      பொங்கல் நாளில் ஊரில் பல பாகங்களிலும் தமிழன் பாரம்பரியத்தை பறைசாற்றும் முத்தமிழ் (இயல், இசை, நாடக) கலைநிகழ்ச்சிகள் இடம்பெறும். அவற்றிலும் மக்கள் பங்கேற்று மகிழ்ச்சி பொங்குவர்.

7. khl;Lg; nghq;fy;> fZg;gz;bif
விவசாயியின் நண்பனான கால்நடைகளே விவசாயத்தில் முக்கிய பங்காற்றுகிறது. "ஏரின் பின்னால்தான் உலகமே சுழல்கின்றது' என்றார் திருவள்ளுவர். அந்த ஏர் முனையை முன்னேந்திச் செல்பவை மாடுகளே! இதன் மூலம் மாடுகளே உலகை உயிர்ப்போடு வைத்துள்ளன எனக் கூறின் மிகையில்லை. இது பட்டிப் பொங்கல் அல்லது கன்றுப் பொங்கல் எனவும் அழைக்கப்படுகிறது.

ஆண்டுமுழுதும் உழைக்கும்  அந்த மாடுகளைக் கடவுளாகவே கருதி வழிபடுவதுதான் மாட்டுப் பொங்கலின் தத்துவம். மாட்டுப் பொங்கலன்று பசுக்களை நன்கு குளிப்பாட்டி,  மஞ்சள் பூசி, திருநீறிட்டு, குங்குமம் வைத்து, மாலை போட்டு வணங்குவர். உழவுக்கருவிகளை சுத்தம் செய்து சந்தனம், குங்குமம் வைப்பார்கள். விவசாயத்தில் பயன் படுத்தப்படும் அனைத்து கருவிகளையும் இதேபோல செய்வார்கள். தாம்பாளத் தட்டுகளில் தோட்டம் காடுகளில் விளைந்த பயிர், பச்சைகளை வைத்தும் தேங்காய், பூ, பழம், நாட்டுச் சர்க்கரை என எல்லாம் பூஜைக்காக எடுத்து வைப்பார்கள்.
காளைகளுக்கு கொம்புகளில் வர்ணம் பூசி, காலில் சலங்கை கட்டி, "வீர நடை' நடக்க வைப்பர். பல வீடுகளில் அன்று காளை மாடுகளுக்கு "பட்டாடை' போர்த்தி, மரியாதை செய்வார்கள்.  இதன் பின் பசு, காளை, எருமை என அனைத்து கால்நடைகளுக்கும் பொங்கல், பழம் கொடுப்பார்கள். பொங்கலிட்ட பிறகு எச்சில் தண்ணீர் தெளித்தல் என்றொரு மரபு மதுரை மாவட்டத்தில் உண்டு. ‘பொங்கலோ பொங்கல் மாட்டு பொங்கல் பட்டி பெருக பால் பானை பொங்க நோவும் பிணியும் தெருவோடு போக’ என்று கூறி மாடு பொங்கல் உண்ட எச்சில் தண்ணீரை தொழுவத்தில் தெளிப்பர். ஜல்லிக்கட்டு என்ற வீர விளையாட்டின் நாயகர்களும் காளைகளே!
ஏறு தழுவுதல் விழா தெய்வ நம்பிக்கையுடன் தொடர்புடையதாக இருக்கவில்லை. ஆனால் சல்லிக்கட்டு கிராமிய தேவதைகளின் வழிபாட்டு நம்பிக்கையுடன் தொடர்புடையதாகத் திகழ்கிறது. அம்மை, வைசூரி போன்ற கொடிய நோய்கள் பரவிய காலத்திலும், மழையில்லா வறட்சிக் காலங்களிலும், பிள்ளை வரம் கேட்கும் நிலையிலும் வேண்டுதல் நடைபெறும். இக்குறைகள் நீக்கப்பட்டால் பொங்கல் நாளன்று சல்லிக்கட்டுகிறோம் என்பதே வேண்டுகோளாய் அமைகிறது.


கணுப் பண்டிகை
கணுப்பிடிஉடன்பிறந்த சகோதரர்களுக்காய் பெண்கள் செய்யும் நோன்பு.
கார்த்திகை எண்ணையும் கணுப்பிடியும் உடன்பிறந்தானுக்கு என்பது பழமொழி.
அதாவது கார்த்திகைமாதம் எண்ணைதேய்த்துக்குளித்து விளக்குவைப்பதும், பொங்கலில் பொங்கிய பால் சாதத்தை உடன்பிறந்தவர்களின் நலத்திற்காக காக்கா குருவிகளுக்கு அன்னமிடுவதும் இந்தப்பழமொழியின் விளக்கம்.
மஞ்சள் இலைகளை அல்லது வாழை இலைகளை கிழக்குமுகமாய் ஆற்றங்கரையிலோ அல்லது வீட்டு மொட்டைமாடியிலோ கோலமிட்டு அதன்மீது வைக்கவேண்டும்.
முதல்நாள் பொங்கிய சாதத்தில் மஞ்சள்பொடிதூவி மஞ்சள்சாதம் கொஞ்சம், குங்குமம் கலந்த சிவப்பு சாதம் கொஞ்சம், வெள்ளையாய் பால்சாதம் கொஞ்சம், வெல்லம் சேர்த்த சக்கரைப்பொங்கல் கொஞ்சம் லேசாய் தயிர் சேர்த்த தயிர்சாதம் என 5வகை அன்னங்களை தயாரிக்கவேண்டும்,ஒவ்வொன்றிலும் 5அல்லது 7பிடி எடுத்து இலைமீது வரிசையாய் வைக்கும்போது,"காக்காப்பிடி வச்சேன் கணூப்பிடி வச்சேன் ... காக்கைக்கு எல்லாம் கல்யாணம்..கண்டவர்க்கெல்லாம் சந்தோஷம்....கூடப்பிறந்த சகோதர்கள் எந்நாளும் குறைவில்லாமல் சந்தோஷமாய்வாழணும்" என்று சொல்லிக்கொண்டே வைக்கவேண்டும்.
உடன்பிறந்தவர்கள் உள்ளூரில் இருந்தால் அழைத்து கலந்த சாதம் பாயசம் செய்து விருந்து போடணும்.அவர்கள் தரும் அன்பளிப்பை பெற்றுக்கொள்ள வேண்டும். சகோதரிகளையும் உடன்பிறந்தவர்கள் மாலை அழைத்து விருந்து வைப்பார்கள்.

8.fhZk; nghq;fy;.

இது பொங்கல் கொண்டாட்டங்களில் நான்காம் நாள் இடம்பெறும்.இந்நாளில் மக்கள் தங்கள் உற்றார் உறவினரைச் சென்று சந்தித்து தங்கள் அன்பையும் உணவுப் பண்டங்களையும் பகிர்ந்து கொள்வர். பெரியோர்களையும் கண்டு வணங்கி மகிழ்கின்றனர். மார்கழி மாதத்தில் வாசலில் கோலமிட்டு பூசணி, செம்பருத்தி, எக்காளம் (எருக்கு) பூக்களை சாண உருண்டையில் சொருகி, கோலத்தின் நடுவே வைக்கும் பழக்கம், பெண் வாரிசுகள் உள்ள வீடுகளில் உள்ளது.சாண உருண்டைகளை அன்றே எருவாட்டியாக்கி, பூசணி பூக்களை நான்காக கிழித்து, அதன் மீது ஒட்டி காய வைத்து 'பூ எருவாட்டி'யாக தயாரிப்பர். இப்படி மார்கழி மாதம் முழுவதும் பூ எருவாட்டியை சேமித்து வைப்பர்.பொங்கல் முடிந்த மூன்றாம் நாள்,கோயில் முன்பாக, பூ எருவாட்டி தட்டுகளை வட்டமாக வைத்து 'தானானே, தானானே' என கும்மியடித்து,  பாடி மகிழ்கின்றனர்
சிறுவீட்டு பொங்கல் தைமாதத்தில் வரும் எதாவது ஞாயிற்று கிழமை கொண்டாட படவேண்டும். எந்த ஞாயிறு கொண்டாடுகிறோமோ அன்று அதிகாலையில் வீட்டு வாசலை பெருக்கி சுத்தம் செய்து சாணம் தெளித்து கோலம் போட்டு கோலத்தின் நடுவில் சாண பிள்ளையாரை பிடித்து உட்கார வைக்க வேண்டும். பிறகு பூவரசம் பூ, பூசணி பூ, செம்பருத்தி பூ போன்ற மலர்களால் அலங்காரம் செய்து வீட்டு சமயலறையில் மண்பானையில் பொங்கல் வைத்து நம் வீட்டு குழந்தைகள் பக்கத்து வீட்டு குழந்தைகள் என்று நமக்கு தெரிந்த அனைத்து குழந்தைகளையும் கலந்து கொள்ள செய்து அவர்களுக்கு சக்கரை பொங்கலும் வேறு நம்மால் முடிந்த பரிசு பொருள்களும் கொடுத்து மகிழ்விக்க வேண்டும். குழந்தையின் சிரிப்பில் இறைவன் இருக்கிறான் என்று நம் முன்னோர்கள் சொல்வார்கள் அப்படிப்பட்ட குழந்தைகளை மகிழ்ச்சி அடைய செய்தால் நம் வாழ்நாள் முழுவதும் இன்பம் மட்டுமே கூட வரும்.

கீழடி
உலகில் காணும் உயரிய பல நாகரீகங்களின் உச்சம்
உன்னத தமிழர் நாகரீகத்தின் எச்சம்
வைகையாற்றங்கரை நாகரீக வரலாறு.
தமிழாய்வு நல்லார் சிலருடன் இன்று 11.10.2016 சிவகங்கை மாவட்டம், மதுரை பெருநகருக்கு அருகில் சிலைமான் என்ற ஊரில், கீழடி எனும் குக்கிராமத்தில் இந்திய தொல்லியல் துறையினரால் மேற்கொள்ளப் பட்ட அகழ்வாய்வு தலத்திற்கு சென்று வந்தேன்.